Wednesday, May 1, 2013

Thanga Meengal - Aanandha Yazhai Song Lyrics. ஆனந்த யாழை - தங்கமீன்கள் - பாடல் வரிகள்





Thanga Meengal



Cast: Ram, Sadhana

Music: Yuvan Shankar Raja


Directed by: Ram




















Song: Aanantha yazhai by Sriram Parthasarathy


Aanandha yazhai meetukirai adi

Nenjil varnam theetugirai
Anbenum kudaiyai neetugirai
Athil aayiram mazhai thuli kootugirai

Iru nenjam inainthu pesidum ulagil bashaigal ethuvum thevai illai

Siru pullil urangum paniyil theriyum malayin azhago thangavillai
Unthan kaigal pidithu pogum vazhi, adhu pothavillai innum vendumadi
Intha mannil ithupol yaruminge engum vazhavillai endru thonruthadi

Aanandha yazhai meetukirai adi

Nenjil varnam theetugirai
Anbenum kudaiyai neetugirai
Athil aayiram mazhai thuli kootugirai

Thoorathu marangal paarkuthadi

Dhevathai ivala ketkuthadi
Thannilai maranthe pookuthadi
Katrinil vaasam thookuthadi
Adi kovil etharku, theivangal etharku
Unathu punnagai pothumadi
Intha mannil ithupol yaruminge engum
Vazhavillai endru thonruthadi

Aanandha yazhai meetukirai adi

Nenjil varnam theetugirai

Un mugam parthal thonuthadi

Vaanathu nilavu sinnathadi
Megathil marainthe parkuthadi
Unidam velicham ketkuthadi
Athai kaiyil pidithu aaruthal uraithu,
Veetukku anupu nallapadi
Intha mannil ithupol yaruminge engum
Vazhavillai endru thonruthadi

Aanandha yazhai meetukirai adi

Nenjil varnam theetugirai

Aanandha yazhai meetukirai adi

Nenjil varnam theetugirai




தமிழில்...



ஆனந்த யாழை மீட்டுகிறாயடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை

சிறு புல்லில் உறங்கும் பணியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி, அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி

தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு, தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி

வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து,
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்